ஆப்கானிஸ்தானில் செய்தியாளர் ஒருவரை தலிபான்கள் பயங்கரமாக தாக்கியுள்ளனர்
ஆப்கானிஸ்தானின் முதல் சுதந்திர செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளரை தலிபான்கள் படுகொலை செய்ததாக தகவல் வெளியானது. இப்படுகொலை சம்பவம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்றதாக செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
காபூலில் உள்ள ஹாஜி யாகூபில் நிலவும் வறுமை, வேலையின்மை குறித்த செய்தியை சேகரிப்பதற்காக செயத்தியாளர் சீயர் யாத் கான், அவரின் ஒளிப்பதிவாளர் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது, அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இச்செய்தியை குறிப்பிட்ட அச்செய்தியாளரே மறுத்துள்ளார்.
இதையும் படிக்க | ஆப்கனிலிருந்து பயங்கரவாதம் ஊடுருவினால் ஒடுக்கப்படும்: முப்படை தளபதி
இதுகுறித்து சீயர் யாத் கான் ட்விட்டர் பக்கத்தில், "காபூல் நியூ சிட்டியில் செய்தி சேகரித்தக் கொண்டிருந்தபோது தலிபான்கள் என்னை தாக்கினர். கேமராக்கள், தொழில்நுட்ப உபகரணங்கள், செல்போன் ஆகியவற்றை அவர்கள் எடுத்து சென்றுவிட்டனர். நான் கொலை செய்யப்பட்டுவிட்டதாக சிலர் பொய்யான செய்தி வெளியிட்டுள்ளனர். லாண்ட் குருசர் வாகத்தில் ஆயுதங்களுடன் வந்த அவர்கள், துப்பூாக்கு முனையில் வைத்து என்னை தாக்கினர்" என பதிவிட்டுள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.