ரஷியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கரோனா பலி அதிகரிப்பு
ரஷியாவில் தினசரி கரோனா பலி உச்சமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 820 பேர் பலியாகியுள்ளனர்.
ரஷியாவில் தினசரி கரோனா பலி உச்சமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 820 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,630 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 68,24,540 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் மேலும் 820 பேர் உயிரிழந்துள்ளனர். இது அதிகபட்ச தினசரி கரோனா பலி ஆகும். மேலும் ஐரோப்பாவில் இது அதிகபட்ச ஒருநாள் கரோனா பலி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரஷியாவில் அதிகபட்ச உயிரிழப்பு 819 என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 179,243 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 5,52,479 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 19,661 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 60,92,818 ஆக உயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.