கோப்புப்படம் 
உலகம்

காபூலில் வெடிச் சத்தம்: விமான நிலையம் அருகே பதற்றம்! (விடியோ)

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே வெடிச் சத்தம் கேட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

DIN


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே வெடிச் சத்தம் கேட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அந்த நாட்டு மக்கள் பெரும் அச்சத்தில் தவித்து வருகின்றனர். சர்வதேச நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களைத் திரும்ப அழைக்கும் பணிகளைத் துரிதப்படுத்தின. ஆப்கன் மக்களும் கிடைக்கும் விமானங்கள் மூலம் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்து வந்தனர்.

இதனிடையே, கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வேறு சில பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதல்களில் 169 ஆப்கானியர்களும் 13 அமெரிக்க வீரர்களும் உயிரிழந்தனர். இதனால், ஆப்கானிஸ்தானில் பதற்றம் மேலும் அதிகரித்தது.

இதன் தொடர்ச்சியாக அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், காபூல் விமான நிலையம் அருகே வெடிச் சத்தம் கேட்டதால் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்டமா சமூக ஊடகப் பதிவுகளில் குறிப்பிடப்படுகின்றன. அதன் விடியோக்களும் பெருமளவில் பரப்பப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சப் பை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்தப் பணி

விநாயகா் சிலை அகற்றம்: ஆா்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்து முன்னணியினா் கைது

எஸ்ஐஆா் சிறப்பு திருத்தும் பணி: அதிமுகவினா் ஆய்வு

குமரி பகவதியம்மன் கோயிலில் டிச.3 இல் காா்த்திகை தீபத் திருவிழா

SCROLL FOR NEXT