முகப்பு
உலகம்

பெரு : படகு விபத்தில் 11 பேர் பலி , 6 பேர் படுகாயம்

பெரு நாட்டின் ஹல்லகா  ஆற்றில் இரண்டு படகுகள் மோதிக்கொண்டதில் 11 பேர் இறந்திருப்பதாகவும் , 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Updated On : 30 ஆகஸ்ட், 2021 at 3:02 PM
பெரு : படகு விபத்தில் 11 பேர் பலி , 6 பேர் மாயம்
பகிர்:

பெரு நாட்டின் ஹல்லகா  ஆற்றில் இரண்டு படகுகள் மோதிக்கொண்டதில் 11 பேர் இறந்திருப்பதாகவும் , 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று (ஆக-29) ஞாயிற்றுக்கிழமை சாண்டா மரியாவிலிருந்து யுரிமைகஸ் பகுதிக்கு செல்ல படகு மூலம் 80 பேர்  பயணம் செய்தனர். அப்போது ஆற்றில் சென்றுகொண்டிருந்த மோட்டார் படகு மோதியதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியானார்கள். மேலும் நீரில் விழுந்த பலர் மாயமாகிருக்கிறார்கள் .

படகில் பயணித்தவர்களில் 20 குழந்தைகளும் இருந்ததால் அங்கே பெரிய பதற்ற நிலை உருவானது.பின் உடனடியாக விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டதும்  அந்நாட்டின் மீட்புப் படையினரும் , கடலோரக் காவல்படையும் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில்  தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

Advertisement

மேலும் விபத்து குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.