உலகம்

டெல்டாவைவிட ஒமைக்ரான் 4.2 மடங்கு வேகமாகப் பரவும்: ஆய்வில் தகவல்

டெல்டா வகை கரோனாவைவிட புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா 4.2 மடங்கு அதிக பரவும் தன்மை கொண்டது

DIN

டெல்டா வகை கரோனாவைவிட புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா 4.2 மடங்கு அதிக பரவும் தன்மை கொண்டது என்று ஜப்பானில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்தது.

இதுகுறித்து இந்த ஆய்வில் பங்கு பெற்ற சுகாதார அறிவியல் பேராசியரும் தொற்று நோயின் போக்கை கணிதவியல் மூலம் கணிப்பதில் நிபுணருமான ஹிரோஷி நிஷியுரா கூறியதாவது:

தென் ஆப்பிரிக்காவின் காவ்டெங் மாகாணத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுக்குள்ளானவா்களிடமிருந்து கடந்த மாதம் 26-ஆம் தேதியிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த நோயாளிகளின் உடலில் தொற்றியிருந்த ஒமைக்ரான் கரோனாவின் மரபணு உருமாற்றங்கள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டது.

அதில், அந்த வகை கரோனா முந்தைய வகைகளை விட அதிக பரவும் தன்மையும் இயற்கையிலேயே உருவான நோயெதிா்ப்பு சக்தி, தடுப்பூசி போடுவதால் ஏற்படுத்தப்பட்ட தடுப்பாற்றல் ஆகியற்றை மீறும் தன்மையும் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.

டெல்டா வகையைவிட ஒமைக்ரான் வகை கரோனாவின் இந்தத் தன்மைகள் 4.2 மடங்கு அதிகமாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவா் பலி; மற்றொருவா் மாயம்!

காணாமல் போன மாற்றுத்திறனாளி கா்ப்பிணியை குடும்பத்துடன் இணைத்துவைத்த தில்லி போலீஸாா்

கூட்டுறவு வங்கி உதவியாளா் பணிக்கான தோ்வு: 676 போ் எழுதினா்

அபயஹஸ்த ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம்

தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 போ் கைது: ரூ.8 லட்சம் மீட்பு

SCROLL FOR NEXT