உலகம்

டெஸ்லா சிஇஓ பதவியிலிருந்து விலகுகிறாரா எலான் மஸ்க்? அடுத்தக்கட்ட திட்டம் என்ன?

DIN

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக உள்ள எலான் மஸ்க், தனது வேலையை விட்டு விலகுவது குறித்து யோசித்துவருவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழுமையாக விவரிக்காமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக செல்வாக்கு மிக்கவராக மாறுவது குறித்து யோசித்து கொண்டிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" பதிவிட்டுள்ளார்.

பணியிலிருந்து விலகுவது குறித்து அவர் விளையாட்டுத்தனமாக கருத்து தெரிவித்தாரா அல்லது உண்மையாகவே தெரிவித்தாரா என்பது குறித்து தெளிவுப்படுத்தமுடியவில்லை. 

ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனரும் தலைமை செயல் அலுவலருமான எலான் மஸ்க், நியூராலிங்க் என்ற பிரெயின் சிப் ஸ்டார்ட் அப் நிறுவனத்தையும் தி போரிங் கன்பெனி என்ற கட்டுமான நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.  

இந்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "அடுத்த பல ஆண்டுகளுக்கு தலைமை செயல் அலுவலராக பணிபுரிவேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். அப்போது இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நான் எழுந்தது முதல் வாரத்தில் 7 நாட்கள் தூங்கச் செல்லும் வரை, இரவும் பகலும் வேலை செய்வதை விட, எனக்கு கொஞ்சம் ஓய்வு நேரம் இருந்தால் நன்றாக இருக்கும்" என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

SCROLL FOR NEXT