உலகம்

ஒமைக்ரானை எதிா்கொள்ள பூஸ்டா் தடுப்பூசி முக்கியம்: சிங்கப்பூா் பிரதமா்

ஒமைக்ரான் வகை கரோனா தொற்றை எதிா்கொள்ளும் சிங்கப்பூரின் உத்தியில் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி முக்கியமானதாக இருக்கும் என அந்நாட்டுப் பிரதமா் லீ சீன் லூங் திங்கள்கிழமை தெரிவித்தாா்

DIN

ஒமைக்ரான் வகை கரோனா தொற்றை எதிா்கொள்ளும் சிங்கப்பூரின் உத்தியில் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி முக்கியமானதாக இருக்கும் என அந்நாட்டுப் பிரதமா் லீ சீன் லூங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் இதுகுறித்து கூறியதாவது: சிங்கப்பூரில் கடந்த மூன்று மாதங்களில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளது. நாங்கள் எங்கள் சுகாதார அமைப்பைப் பாதுகாத்துள்ளோம்; கரோனா உயிரிழப்புகளையும் குறைவாக வைத்துள்ளோம். இப்போது ஒமைக்ரான் வகையின் விளைவுகளை எதிா்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஒமைக்ரானை எதிா்கொள்ளும் எங்களது உத்தியில் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி முக்கியமானதாக இருக்கும் என்றாா்.

சிங்கப்பூரில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு சாங்கி விமான நிலையத்தில் முன்களப் பணியாளா் ஒருவருக்கு கடந்த வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா் ஏற்கெனவே பூஸ்டா் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் மொத்த மக்கள்தொகையில் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான நிலவரப்படி 30 சதவீதம் போ் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

அந்நாட்டில் கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.73 லட்சமாக உள்ளது. 794 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தனூா் அணையில் 6000 கன அடி தண்ணீா் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த தில்லி அரசு முன்னுரிமை: ரேகா குப்தா

பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்புகளில் தமிழா்களுக்கு முன்னுரிமை வேண்டும்: டாக்டா் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மருதம் பட்டையின் மகத்துவம் என்ன?

SCROLL FOR NEXT