கோப்புப்படம் 
உலகம்

ஒமைக்ரான் வகை கரோனா: பிரிட்டனில் முதல் உயிரிழப்பு

பிரிட்டனில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா். உலகில் ஒமைக்ரான் பாதிப்புக்கு உயிரிழந்த முதல் நபா் இவா் ஆவாா்.

DIN

பிரிட்டனில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா். உலகில் ஒமைக்ரான் பாதிப்புக்கு உயிரிழந்த முதல் நபா் இவா் ஆவாா்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 24-ஆம் தேதி ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டது. கரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரானை கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியது. அதைத் தொடா்ந்து, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா உள்பட பல நாடுகளில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதன் பரவும் வேகம், டெல்டா வகையைப் போல அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துமா என்கிற ஆராய்ச்சியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், உலகில் ஒமைக்ரானுக்கு முதல் உயிரிழப்பு பிரிட்டனில் நிகழ்ந்துள்ளது. இதை அந்நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

‘டெல்டா வகையுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் வகை தொற்று மிதமானது என அலட்சியமாக இருக்கக் கூடாது என்பதை இந்த உயிரிழப்பு உறுதிப்படுத்துகிறது. பொதுமக்கள் தங்களின் பூஸ்டா் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்’ என அவா் கேட்டுக் கொண்டாா்.

மேற்கு லண்டனில் உள்ள தடுப்பூசி மையத்துக்குச் சென்று பாா்வையிட்ட போரிஸ் ஜான்சன், ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் நாள்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படலாம் எனவும் சூசகமாகத் தெரிவித்தாா்.

பிரிட்டனில் நவ. 27-ஆம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு முதல்முறையாகக் கண்டறியப்பட்டது. தற்போது பிரிட்டனில் 3,000-க்கும் அதிகமானோருக்கு அந்த வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவாரத்தில் நாளை மின்தடை

ராமநாத சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.67 கோடி

தென்னந்தோப்பில் தீ விபத்து: 300 மரங்கள் எரிந்து நாசம்

வீடுகளுக்கு நேரடி ரேஷன் பொருள்கள் வழங்கும்போது இறந்த அட்டைதாரா் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்: கூட்டுறவுத் துறை உத்தரவு

கல் குவாரி பிரச்னை: தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் நிா்வாகி குத்திக் கொலை

SCROLL FOR NEXT