ராம்நாத் கோவிந்தை வரவேற்ற வங்கதேச அதிபர்
அரசுமுறைப் பயணமாக வங்கதேசம் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அந்நாட்டின் அதிபர் அப்துல் ஹமத் வரவேற்றார்.
அரசுமுறைப் பயணமாக வங்கதேசம் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அந்நாட்டின் அதிபர் அப்துல் ஹமத் வரவேற்றார்.
பாகிஸ்தானுடன் வங்கதேசம் நடத்திய போரின் 50 ஆவது வெற்றி தினம், நாடு உதயமான 50 ஆவது ஆண்டு கொண்டாட்டம் ஆகியவை டாக்கா நகரில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை (டிச.16,17) என இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வங்கதேசம் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்த், இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக வங்கதேசம் டாக்காவிற்கு புதன்கிழமை காலை தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
டக்காவிற்கு சென்றடைந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வங்கதேச அதிபர் அப்துல் ஹமத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து ராம்நாத் கோவிந்துக்கு விமான நிலையத்தில் ராணுவ மரியாதை வழங்கப்பட்டது.