ஜப்பான்- வணிக கட்டடத்தில் தீ விபத்து: 27 பேர் பலி 
உலகம்

ஜப்பான்- வணிக கட்டடத்தில் தீ விபத்து: 27 பேர் பலி

ஜப்பான் நாட்டின் ஒசாகா மாவட்டத்தில் ஏற்பட்ட கட்டட தீ விபத்தில் 27 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

DIN

ஜப்பான் நாட்டின் ஒசாகா மாவட்டத்தில் ஏற்பட்ட கட்டட தீ விபத்தில் 27 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

ஜப்பானின் ஒசாகா மாவட்டத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி வணிகக் கட்டடத்தின் 4-வது மாடியில் இன்று காலை  திடிரென தீப்பிடிக்க ஆரம்பித்தது. 

உடனடியாக மீட்புப்படையினர் வந்து தீயை அணைப்பதற்குள் மற்ற தளங்களுக்கும் தீ வேகமாகப் பரவத் தொடங்கியது. இதனால், அங்கிருந்த மக்களில் 27 பேர் பலியானதாகவும் , ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் மீட்புப்படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், கட்டடத்தில் மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.கே.புரம் அருகே குளத்தில் குடியேறி சமைக்கும் போராட்டம்

பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

கோவையில் ரூ.27 லட்சம் கேட்டு எண்ம கைது செய்யப்பட்ட மூத்த தம்பதி மீட்பு

அரசு பள்ளி வளாகத்தில் கட்சி கொடி

பள்ளிப் பேருந்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு

SCROLL FOR NEXT