முகப்பு
உலகம்

பிரிட்டன்: அமலுக்கு வந்தன பொதுமுடக்க கட்டுப்பாடுகள்

பிரிட்டனில் ஒமைக்ரான் வகை கரோனா பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

பிரிட்டனில் ஒமைக்ரான் வகை கரோனா பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தன.

அதன்படி, பல பகுதிகளில் இரவு கேளிக்கை விடுதிகள் மூடப்பட வேண்டும். மதுபானக் கூடங்கள், உணவகங்கள், திரையரங்குகளில் 6 பேருக்கு மேல் அனுமதிக்கப்படக் கூடாது. உள்ளரங்குகளில் 30 பேருக்கு மேலும் வெளியரங்குகளில் 50 பேருக்கு மேலும் குழுமக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதமா் போரிஸ் ஜான்ஸன் திங்கள்கிழமை (டிச. 27) நடத்தும் ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.