கோப்புப்படம் 
உலகம்

நான்காவது தவணை தடுப்பூசி பணியை தொடங்கிய இஸ்ரேல்; ஆய்வாளர்கள் அதிருப்தி

உலகில் மின்னல் வேகத்தில் தடுப்பூசி பணிகளை தொடங்கிய இஸ்ரேல், பைசர் நிறுவனத்துடன்  நேரடியாக ஒப்பந்தம் செய்து தடுப்பூசி உற்பத்தியைச் சொந்த நாட்டிலேயே தொடங்கியது. 

DIN

கடந்த ஒரு வாரத்தில், ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்துவருகிறது. அதிக பரவல் தன்மை கொண்ட ஒமைக்ரான், அமெரிக்கா, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளில் உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, ஏழே நாள்களில், 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, அமெரிக்கா, ஐரோப்பிய என உலகின் பல்வேறு நாடுகளும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவிலும் கூட வரும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பூஸ்டர் டோஸ் தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. உலகில் உள்ள அனைவருக்கும் முதலில் 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் கரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

அடுத்தாண்டு நடுப்பகுதிக்குள் உலகில் அனைத்து நாடுகளிலும் குறைந்தபட்சம் 70% பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால், உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை எந்த நாடும் தீவிரமாக பின்பற்றவில்லை.

குறிப்பாக, இஸ்ரேல் மீது இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. உலகில் மின்னல் வேகத்தில் தடுப்பூசி பணிகளை தொடங்கிய இஸ்ரேல், பைசர் நிறுவனத்துடன்  நேரடியாக ஒப்பந்தம் செய்து தடுப்பூசி உற்பத்தியைச் சொந்த நாட்டிலேயே தொடங்கியது. 

அதே வேகத்தில் பூஸ்டர் டோஸ் பணிகளையும் தொடங்கியுள்ளது. 
ஏற்கனவே, இதுவரை பொதுமக்களுக்கு 3 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், தற்போது 4ஆவதாக மேலும் ஒரு பூஸ்டர் டோஸை போடும் பணிகளை இஸ்ரேல் அரசு தொடங்கியுள்ளது. 

முதற்கட்டமாகச் சுகாதார ஊழியர்களுக்கும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் இந்த 4ஆவது கரோனா டோஸ் போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், அனைத்து ஆய்வாளர்களும் இஸ்ரேலின் இந்த முடிவை ஆதரிக்கவில்லை. பூஸ்டர் டோஸ் குறித்த ஆய்வுகளே இன்னும் முடியவில்லை. இச்சூழலில் 4ஆவது டோஸால் ஒமைக்ரானை தடுக்க முடியும் எனக் கூறுவதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என ஒரு தரப்பினர் இஸ்ரேல் முடிவை விமர்சித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘சிஸ்டம் கெட்டுப்போச்சு!’ பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல்! -லாலுவின் மகன் விமர்சனம்

சுங்கச் சாவடியில் ராணுவ வீரரை கட்டி வைத்து அடித்த இளைஞர்கள்! 6 பேர் கைது!

இந்தியாவுக்கு வரி; ஆனால் சீனாவுக்கு இல்லை! அமெரிக்கா விளக்கம்!

ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் 8 சதவிகிதம் உயர்வு!

அமெரிக்கா: டிரக் - கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி! இந்தியர் மீது கடும் விமர்சனம்!

SCROLL FOR NEXT