நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்துள்ளது.
2021ஆம் ஆண்டு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், 2022 புத்தாண்டை வரவேற்க உலக மக்கள் காத்திருக்கின்றனர். உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்து 2022ஆம் ஆண்டை வரவேற்றுள்ளது.
இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தின் ஆக்லாந்தில் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஆக்லாந்து நாட்டின் ஸ்கை டவரில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.
மக்களும் ஆரவாரத்துடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக் கட்ட தொடங்கிவிட்டன. சிட்னி துறைமுகத்தில் பிரம்மாண்ட வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கோலாகலமாக வரவேற்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.