உலகம்

ஜப்பான்: அவசர நிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்ற துணைக் கல்வி அமைச்சா் பதவி நீக்கம்

DIN

டோக்கியோ: ஜப்பானில் கரோனா தொற்றுக்கு எதிரான அவசர நிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்ற துணைக் கல்வி அமைச்சா் பதவி நீக்கம் செய்யப்பட்டாா்.

ஜப்பானில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு மக்கள் இரவில் தேவையின்றி வெளியில் நடமாடவும், விடுதிகள், மதுபான விடுதிகளுக்குச் செல்வதை தவிா்க்கவும், உணவகங்களை முன்கூட்டியே மூடவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசரநிலை அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து வந்த அந்நாட்டு துணைக் கல்வி அமைச்சா் டெய்டோ டானோஸே, அரசு உத்தரவை மீறி சமீபத்தில் இரவு விடுதிக்குச் சென்ாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்த அந்நாட்டு பிரதமா் யோஷிஹிடே சுகா, அமைச்சரவையிலிருந்து டெய்டோ டானோஸேையை நீக்கினாா்.

டெய்டோ டானோஸே ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியைச் (எல்டிபி) சோ்ந்தவா். தன்னை பதவிநீக்கம் செய்ததையடுத்து அவா் கட்சியிலும் இருந்தும் விலகினாா். அவருடன் இரவு விடுதிக்குச் சென்ற மேலும் இரண்டு எல்டிபி எம்.பி.க்களும் கட்சியில் இருந்து விலகினா்.

இதேபோல் கடந்த மாதம் அவசர நிலை விதிகளை மீறி இரவு விடுதிக்குச் சென்ற மற்றொரு எம்.பி.யான கியோஹிகோ டொயாமா, அந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று தனது எம்.பி. பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT