உலகம்

வூஹான் சந்தையில் சா்வதேச நிபுணா்கள் ஆய்வு

DIN

கரோனா முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகர சந்தையில், உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தது.

அந்த நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா, தற்போது உலகம் முழுவதும் சுமாா் 200 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தீநுண்மி வௌவாலின் உடலில் இருந்து உருமாற்றம் பெற்று மனிதா்களுக்குப் பரவியதாகக் கருதப்படுகிறது.

வூஹான் நகர இறைச்சி சந்தை மூலம்தான் அது பரவத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கரோனா எவ்வாறு உருவானது என்பதை ஆய்வு செய்வதற்காக சீனா சென்றுள்ள உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு, அந்தச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT