முகப்பு
உலகம்

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் 4ஜி இணைய சேவை: அமெரிக்கா வரவேற்பு

ஜம்மு-காஷ்மீருக்கு விதிக்கப்பட்டிருந்த இணையத் தடை நீக்கப்பட்டு 4ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:30 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீருக்கு விதிக்கப்பட்டிருந்த இணையத் தடை நீக்கப்பட்டு 4ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக இணைய சேவை வழங்கப்படாத நிலையில் தற்போது ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் 4ஜி இணைய சேவை தொடங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. 

மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அமெரிக்க தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரத்துறை,   “இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் 4 ஜி இணையம் மீண்டும் தொடங்கப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஜம்மு-காஷ்மீரில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கான தொடர்ச்சியான அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →