உலகம்

நார்வே நிலச்சரிவு: 2 வாரங்களுக்குப் பிறகு இருவரது உடல்கள் மீட்பு

DIN

நார்வே நாட்டின் ஜெஜெர்ட்ரம் நகரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இருவர் 2 வார காலத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டனர்.

தெற்கு நார்வேயின் ஜெஜெர்ட்ரம் நகரத்தில் கடந்த புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள 12க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன. மேலும் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் வரை பலியாகியும், 10 பேர் காயமடைந்தும் உள்ளனர். 

நிலச்சரிவு காரணமாக அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முடியாமல் அதிகாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் 2 வார காலத்திற்கு பிறகு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த இருவரது உடல்கள் புதன்கிழமை மீட்கப்பட்டன. மேலும் நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT