கரோனா பாதிப்பு: உலக அளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24.05 லட்சத்தைக் கடந்தது
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 10.09 கோடியாக அதிகரித்துள்ளது
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 10.09 கோடியாக அதிகரித்துள்ளது
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வரும் கரோனா, ஐரோப்பா-அமெரிக்க நாடுகளில் மோசமான பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 10,91,04,991 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 24,05,432 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 8,11,29,285 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,54,20,020 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 98,687 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,81,96,964 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 4 லட்சத்து 96 ஆயிரத்து 063-ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,09,04,940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,55,673 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 98,11,255-ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,38,647 பேர் பலியாகியுள்ளனர். மூன்றாவது இடத்தில் மெக்ஸிகோ உள்ளது. அங்கு இதுவரை 1,72,557 பலியாகியுள்ளனர்.
இதனிடையே கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் திறமையாகச் செயல்பட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.