முகப்பு
உலகம்

ஆப்கனில் பயங்கரவாதத் தாக்குதல்: 4 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 4 பேர் பலியாகினர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
கோப்புப்படம்
பகிர்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 4 பேர் பலியாகினர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தின் உள்ள ஜலாலாபாத் நகரில் செவ்வாய்க்கிழமை காலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.

இதில் காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் பலியாகினார். சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடந்த தாக்குதலில் இரு காவலர்களும், ஒரு மருத்துவரும் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து ஆப்கானிஸ்தான் காவல்துறை விசாரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.