உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 11.12 கோடியாக உயர்வு: அமெரிக்காவில் ஒரே நாளில் 2,285 பேர் பலி

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.12 கோடியாக அதிகரித்துள்ளது.

DIN

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.12 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சீனாவிலிருந்து பரவிய கரோனா நோய்த்தொற்று கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில், ஐரோப்பா-அமெரிக்க நாடுகளில் மோசமான பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 11,12,34,381 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 24,62,706 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 8,61,11,433 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,26,28,922 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 94,899 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,86,03,813    கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5 லட்சத்து 7 ஆயிரத்து 746-ஆக உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 76,625 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,285 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,09,04,940 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,55,673 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொடர்ந்து தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,00,81,693 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 51,067 பேருக்கு தொற்று பாதிப்பும், 1,345 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,44,955 பேர் பலியாகியுள்ளனர். மூன்றாவது இடத்தில் மெக்ஸிகோ உள்ளது. அங்கு இதுவரை 1,78,108 பலியாகியுள்ளனர்.

இதனிடையே கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் திறமையாகச் செயல்பட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT