உலகம்

பிரேசிலில் 2.50 லட்சத்தை நெருங்கிறது கரோனா பலி

PTI

பிரேசிலில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

கடந்த 5 வாரங்களாக நாளொன்றுக்கு சராசரியாக 1000 பேர் பலியாகி வருகின்றனர். இதையடுத்து, மொத்த உயிரிழப்பு 2,49,957 லட்சத்தை நெருங்கியுள்ளது.

பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,39,3,886-ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் அதிகபட்சமாக ஸா பாலோ பகுதியில் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தொற்று காரணமாக அங்கு இறப்பும் அதிகரித்துள்ளது. 

தொற்று பாதித்த 3,76,7,664 இதுவரை நோயிலிருந்து மீண்டுள்ளனர். 3,59,560 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 

தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவரும், நிலையில் தினசரி பாதிப்பும் பலியும் சமீபமாக உயர்ந்துள்ளது. நாட்டின் பல இடங்களில் தொடர்ந்து ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும், நாட்டில் பலி எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தை பிரேசில் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT