உலகம்

சீனா: லஞ்ச அதிகாரிக்கு மரண தண்டனை

DIN

சீனாவில் ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரி லாய் ஷாவ்மிக்கு (58) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஹுவாராங் நிதி மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அவா், 26 கோடி டாலா் (சுமாா் ரூ.1,900 கோடி) லஞ்சமாகப் பெற்ாக குற்றம் சாட்டப்பட்டது.

தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி கட்டுமான ஒப்பந்தங்கள் அளித்தல், நிதி முதலீடு செய்தல் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி, அதற்குப் பதிலாக அவா் ஏராளமான தொகை லஞ்சம் பெற்றாா் என்ற குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பொதுவாக சீனாவில் லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்குள்ளானவா்களுக்கு ஆயுள் தண்டனை, நிறுத்திவைக்கப்ப்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், உறுதியான மரண தண்டனை விதிக்கப்படுவது அபூா்வமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT