ஆக்ஸ்போர்டு உருவாக்கிய கரோனா தடுப்பூசிக்கு மெக்சிகோ ஒப்புதல்
உலகில் கரோனா இறப்பு அதிகமுள்ள நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
உலகில் கரோனா இறப்பு அதிகமுள்ள நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து நாடுகளும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதனிடையே கரோனா தடுப்பூசியும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பரிசோதனையில் உள்ளன.
இந்நிலையில், கரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் ஒன்றான மெக்சிகோ, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
நாட்டில் அவசரகால பயன்பாட்டிற்காக அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசிக்கு மெக்சிகன் கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக நாட்டின் துணை சுகாதார அமைச்சர் ஹ்யூகோ லோபஸ்-கேடெல் தெரிவித்தார். இந்த தடுப்பூசி மெக்சிகோவில் மார்ச் மாதத்தில் கிடைக்கக்கூடும் என்றும் கூறினார். முன்னதாக இந்த தடுப்பூசி பிரிட்டன், இந்தியா மற்றும் அர்ஜென்டினாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இது மெக்சிகோவால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது கரோனா வைரஸ் தடுப்பூசி ஆகும். முன்னதாக கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி கரோனா ஃபைசர் தடுப்பூசி மெக்சிகோவில் பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டதில் நான்கில் ஒரு பங்கினர் தடுப்பூசி பெற்றுவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளார். இதுவரை 30,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்ஸிகோவில் 14 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,27,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.