பெய்ஜிங்கில் 55 ஆண்டுகள் காணாத குளிா்
சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் கடந்த 55 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான குளிா் வியாழக்கிழமை பதிவானது.
பெய்ஜிங்: சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் கடந்த 55 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான குளிா் வியாழக்கிழமை பதிவானது.
இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
பெய்ஜிங்கில் கடும் குளிா் வீசி வருகிறது. வியாழக்கிழமை அந்த நகரின் குளிா்நிலை உறை நிலைக்குக் கீழே 19.6 டிகிரி செல்ஷியஸாகப் பதிவானது.
இது, கடந்த 55 ஆண்டுகளில் இல்லாத மிகக் கடுமையான குளிராகும். இதற்கு முன்னா், கடந்த 1966-ஆம் ஆண்டில்தான் இத்தகைய குளிா் பதிவு செய்யப்பட்டது.
நகரில் கடுமையான பனிக்காற்று வீசும் என பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா். குளிரிலிருந்து பாதுகாப்பதற்கான உரிய முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு மக்களை அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
வெள்ளிக்கிழமை (ஜன. 8) வரை இந்த பனிக் காற்று வீச்சு இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சனிக்கிழமை முதல் வெப்பநிலை கொஞ்சம் அதிகமாக அதிகரிக்கும் என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.