உலகம்

பிரேசிலில் கரோனா பலி 2 லட்சத்தைத் தாண்டியது!

DIN

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. 

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 3 ஆம் இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் அந்நாட்டு சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலில் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 1,524 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பிரேசிலில் கரோனா பலி 2,00,498 ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் மொத்தமாக கரோனா பாதிப்பு 80 லட்சத்தைக் நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 87,843 பேர் உள்பட இதுவரை 7,961,673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் 70,96,931 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 6,64,244 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT