முகப்பு
கோப்புப் படம்.
உலகம்

மலேசியாவில் வெள்ளம்: 6 பேர் பலி, 46,000 பேர் பாதிப்பு

மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 6 பேர் பலியானார்கள். 

உலகம்

மலேசியாவில் வெள்ளம்: 6 பேர் பலி, 46,000 பேர் பாதிப்பு

மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 6 பேர் பலியானார்கள். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
கோப்புப் படம்.
பகிர்:

மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 6 பேர் பலியானார்கள். 
மலேசியாவில் பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு மாகாணங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை மாகாணமான பஹாங் உள்ளிட்ட மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. 
மூன்று ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் இருந்து 46 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 12,487 குடும்பங்கள் 426 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். இதனிடையே மலேசியாவில் கனமழை ஜனவரி 12ஆம் தேதி வரை தொடர வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.  
 
முழு கட்டுரையைப் படிக்க →