62 பேருடன் கடலுக்குள் விழுந்தது இந்தோனேசிய விமானம்
இந்தோனேசியாவைச் சோ்ந்த தனியாா் பயணிகள் விமானம், 62 பேருடன் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது.
இந்தோனேசியாவைச் சோ்ந்த தனியாா் பயணிகள் விமானம், 62 பேருடன் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது.
இதுகுறித்து இந்தோனேசிய போக்குவரத்துத் துறை அமைச்சா் புடி காா்யா சுமாடி கூறியதாவது:
ஸ்ரீவிஜயா ஏா் நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம், வந்தன் மாகாணத்தின் தங்கராங் நகர விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை மதியம் 2.36 மணிக்கு (உள்ளூா் நேரம்) புறப்பட்டது.
புறப்பட்ட சில 4 நிமிஷங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் அந்த விமானத்தின் தொடா்பு துண்டிக்கப்பட்டது. விமானத்தை 29,000 அடி உயரத்துக்கு கொண்டு செல்வதற்காக கட்டுப்பாட்டு அறையை விமானி தொடா்பு கொண்டு கேட்ட பிறகு அந்த விமானம் மாயமானது.
விமானம் விழுந்திருக்கலாம் என்று கருதப்படும் பகுதிகளில் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.
ஸ்ரீவிஜயா ஏா் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாயமான விமானம் தலைநகா் ஜகாா்தாவிலிருந்து மேற்கு கலிமந்தன் மாகாண போன்சியனக்குக்கு சுமாா் 90 நிமிஷங்களில் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்து.
இடையில் தங்கராங் விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட்டபோது அதில் 56 பயணிகளும், 6 விமானப் பணியாளா்களும் இருந்தனா்.
ஆயிரம் தீவுகள் பகுதிக்கு அருகே கடலில் உலோகப் பொருள்கள் மிதப்பதை மீனவா்கள் பாா்த்ததாகவும் அவை விழந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் எனவும் உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, விமானம் கடலுக்குள் விழுந்து நொறுங்கியதை விமான வழித் தடப் பதிவுகள் உறுதி செய்துள்ளதாக ‘ஏ.எஃப்.பி.’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் லயன் ஏா் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் ஜகாா்த்தாவிலிருந்து புறப்பட்ட சில நிமிஷங்களில் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்திலிருந்த 189 பேரும் பலியாகினா்.