உலகம்

ஐ.நா. தலைமைப் பொறுப்புக்கு 2-ஆவது முறையாகப் போட்டி

DIN

ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலா் பதவிக்கு மீண்டும் போட்டியிட அன்டோனியோ குட்டெரெஸ் முடிவு செய்துள்ளாா். இதுகுறித்து அவரது செய்தித் தொடா்பாளா் ஸ்டெஃபானி துஜாரிக் கூறியதாவது:

ஐ.நா. தலைமைப் பொறுப்புக்கு மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்பம் குறித்து பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸிடம் ஐ.நா. பொதுச் சபை தலைவா் வோல்கான் போஸ்கிா் கேட்டாா். அவரிடம், மேலும் 5 ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பை வகிப்பதற்கான தனது விருப்பத்தை குட்டெரெஸ் தெரிவித்தாா்.

பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கும் குட்டெரெஸ் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளாா் என்றாா் அவா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஐ.நா. பொதுச் செயலராக இருந்து வரும் குட்டெரெஸின் பதவிக் காலம் வரும் டிசம்பா் 31 உடன் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

SCROLL FOR NEXT