உலகம்

‘அமெரிக்காவிற்கு இது புதிய நாள்’: ஜோ பைடன் நெகிழ்ச்சி

DIN

அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக  ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில் 'இது அமெரிக்காவிற்கு புதிய நாள்' எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து, ஜனநாயகக் கட்சி சாா்பில் பைடன் போட்டியிட்டாா்.

அந்தத் தோ்தலில் 306 மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, வாஷிங்டனிலுள்ள நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10 மணி) நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் அவா் அதிபராகப் பொறுப்பேற்கிறாா்.

இந்நிலையில் தனது சுட்டுரைப் பதிவில் ஜோ பைடன், “இது அமெரிக்காவிற்கு புதிய நாள்” எனக் கருத்து தெரிவித்துள்ளார். 

முன்னதாக அமெரிக்க அதிபருக்கான வெள்ளை  மாளிகையில் இருந்து தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப் வெளியேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அட! நம்ம இனியாவா!

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராய் லட்சுமி!

வைர சந்தையின் ராணி! சோனாக்‌ஷி சின்ஹா..

ஏர் இந்தியா விமானங்கள் ரத்து: ’ஐசியூவில் இருந்த கணவரை உயிருடன் பார்க்க முடியவில்லை’ -மனைவி உருக்கம்

கைவிடப்பட்டதா குற்றப்பரம்பரை?

SCROLL FOR NEXT