முகப்பு
உலகம்

துபையில் இந்திய தம்பதி கொலை; சாட்சியமளிக்கும் மகள்கள்

துபையில் இந்திய தம்பதியர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளியால் கொலை செய்யப்பட்ட வழக்கில், தம்பதியரின் இரண்டு மகள்களும், அவர்களது நண்பரும் சாட்சியமளிக்க உள்ளனர்.

Updated On : 21 ஜனவரி, 2021 at 4:17 PM
துபையில் இந்திய தம்பதி கொலை; சாட்சியமளிக்கும் மகள்கள்
பகிர்:


துபை: துபையில் இந்திய தம்பதியர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளியால் கொலை செய்யப்பட்ட வழக்கில், தம்பதியரின் இரண்டு மகள்களும், அவர்களது நண்பரும் சாட்சியமளிக்க உள்ளனர்.

இந்த வழக்கு வரும் துபை நீதிமன்றத்தில் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது, கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதியின் 18 மற்றும் 13 வயது மகள்கள்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளனர்.

ஹிரெண் ஆதியா (48) மற்றும் அவரது மனைவி விதி (40) ஆகியோர் அரேபியன் ராஞ்செஸ் பகுதியில் உள்ள தங்களது வீட்டில் கடந்த 2020 ஜூன் 17-ஆம் தேதி 26 வயதான பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளியால் படுகொலை செய்யப்பட்டனர்.

Advertisement

இந்த வீட்டுக்கு ஏற்கனவே பராமரிப்புப் பணிக்காக இந்த நபர் அழைக்கப்பட்டதாகவும், அப்போது வீட்டில் ஏராளமான பணம் இருப்பதைப் பார்த்து, அதைத் திருட திட்டமிட்டு, வீட்டுக்குள் நுழைந்து இந்த கொலைகளைச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 18 வயது மகளுக்கும் கத்திக் குத்துக் காயங்கள் ஏற்பட்டபோதும், குற்றவாளியை தப்பிக்க விடாமல் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.