உலகம்

இந்திய விமானங்களுக்கான தடையை ஜூலை 21 வரை நீட்டித்தது ஐக்கிய அரபு அமீரகம்

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ஜூலை 21 வரை தடை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு தற்காலிக தடையை உலக நாடுகள் பலவும் விதித்து வருகின்றன. அந்த வகையில் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய விமானங்களுக்கான தடையை நீட்டித்து ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜூன் 30 வரை விதிக்கப்பட்டிருந்த தடையானது ஜூலை 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கதேசம், நேபாளம், இலங்கை, வியந்நாம், நமிபியா, காங்கோ, உகாண்டா, லிபியா, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாட்டு விமானங்களுக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT