உலகம்

பிலிப்பின்ஸில் விமானப் படை விமானம் விபத்து: பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு

பிலிப்பின்ஸில் விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது.  

DIN

பிலிப்பின்ஸில் விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது. 
தென் பிலிப்பின்ஸில் இருந்து 92 பேருடன் புறப்பட்ட சி-130 என்கிற விமானப்படை விமானம் சுலு மாகாணத்தின் ஜோலோ தீவில் தரையிறங்க முயன்ற போது கட்டுப்பாட்டை விழுந்து நொறுங்கியது. விழுந்த வேகத்தில் விமானம் வெடித்துச் சிதறியது. இதனால் விமானம் தீப்பற்றியது. 
தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தற்போது இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது. 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
விமானம் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், விபத்து தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT