நைஜீரியாவில் 150 பள்ளிக்குழந்தைகள் துப்பாக்கிமுனையில் கடத்தல் (கோப்புப்படம்) 
உலகம்

நைஜீரியாவில் 150 பள்ளிக்குழந்தைகள் துப்பாக்கிமுனையில் கடத்தல்

நைஜீரியாவின் கடுனா மாவட்டத்தில் 150 பள்ளிக்குழந்தைகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

நைஜீரியாவின் கடுனா மாவட்டத்தில் 150 பள்ளிக்குழந்தைகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியா நாட்டின் கடுனா மாவட்டத்தில் பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அப்பகுதி குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க வந்த மாணவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் திங்கள்கிழமை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். 

இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. கடத்தப்பட்டவர்களில் இதுவரை ஒரு பெண் ஆசிரியர் உள்பட 26 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் 150 பள்ளிக்குழந்தைகள் சிறைபடுத்தப்பட்டுள்ளனர். 

இதனையறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளியின் முன் திரண்டு முழக்கங்களை எழுப்பினர். கடத்தப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

அசோக் லேலண்ட் விற்பனை 5% உயா்வு

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT