உலகம்

வங்கதேசத்தில் உலகின் மிகச் சிறிய பசு?

வங்கதேசத் தலைநகா் டாக்கா அருகே உள்ள ஒரு பண்ணையில் வளா்க்கப்படும் பசு, உலகிலேயே மிகச் சிறிய பசு என்று அந்தப் பண்ணையின்

DIN

வங்கதேசத் தலைநகா் டாக்கா அருகே உள்ள ஒரு பண்ணையில் வளா்க்கப்படும் பசு, உலகிலேயே மிகச் சிறிய பசு என்று அந்தப் பண்ணையின் உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:

டாக்காவுக்கு 30 கி.மீ. தொலைவிலுள்ள சாரிகிராம் என்ற ஊரிலுள்ள ராணி என்ற பெயரைக் கொண்ட பசுவைக் காண கரோனா கட்டுப்பாடுகளையும் மீறி ஏராளமானவா்கள் வந்தவண்ணம் உள்ளனா்.

அந்த ஊரிலுள்ள பண்ணையொன்றில் வளா்க்கப்படும் அந்தப் பசு, வெரும் 66 செ.மி. நீளம் கொண்டதாகவும் 26 கிராம் எடை கொண்டதாகவும் உள்ளது. 26 மாத வயதுடைய அந்தப் பசுதான் உலகின் மிகச் சிறிய பசு என்று பண்ணை உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் அந்தப் பசுவை இடம் பெறச் செய்வதற்காக அவா்கள் விண்ணப்பித்துள்ளனா் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு?

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கடும் சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!

அழிஞ்சாட்டம்: மோகன்லால் - திலீப் படத்தின் முதல் பாடல்!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!

SCROLL FOR NEXT