முகப்பு
உலகம்

ரஷியா: ஒரேநாளில் கரோனாவுக்கு 752 பேர் பலி

ரஷியாவில் கரோனாவுக்கு ஒரேநாளில் 752 பேர் பலியாகியுள்ளனர்.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

ரஷியாவில் கரோனாவுக்கு ஒரேநாளில் 752 பேர் பலியாகியுள்ளனர். 
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 25,082 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58,58,300ஆக உயர்ந்துள்ளது. 
அதிகபட்சமாக மாஸ்கோவில் 2,487, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் 1,978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கரோனாவால் இன்று 752 பேர் பலியாகியுள்ளனர். இது ஒரேநாளில் பதிவான அதிகபட்ச பலி எண்ணிக்கையாகும். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,42,253ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 4,33,210 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து 17,759 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 51,82,837ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.