உலகம்

பிரான்ஸ்: கூகுளுக்கு ரூ.4,400 கோடி அபராதம்

DIN

பிரபல தேடுதல் வலைதள நிறுவனமான கூகுளுக்கு பிரான்ஸின் போட்டியிடல் ஒழுங்காற்று அமைப்பு 50 கோடி யூரோ (சுமாா் ரூ.4,400 கோடி) அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

பிரான்ஸ் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை, தங்களது தேடுதல் வலைதளத்தில் கூகுள் பயன்படுத்துவது தொடா்பாக பிரான்ஸின் போட்டியிடல் ஒழுங்காற்று அமைப்பு விசாரணை நடத்தி வந்தது.

அந்த விசாரணையின் முடிவில், கூகுளுக்கு 50 கோடி யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர, செய்திகளைச் சேகரிக்கும் நிறுவனங்களுக்கு கூகுள் நிறுவனம் எந்த வகையில் இழப்பீடு வழங்கப்போகிறது என்பது குறித்த செயல்திட்டத்தை 2 மாதங்களுக்கு வெளியிட வேண்டும் என்று ஒழுங்காற்று அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறினால், நாளொன்றுக்கு 9 லட்சம் யூரோ (சுமாா் ரூ.79 கோடி) அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT