உலகம்

இராக்கில் கரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 40 பேர் பலி

IANS


பாக்தாத்: இராக்கில் உள்ள கரோனா மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 40 பேர் பலியாகினர்.

இராக்கின் தெற்கு நகரான நஸரியாவில் உள்ள அல் ஹுஸைன் மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில், கரோனா பாதித்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 40 நோயாளிகள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக்ஸிஜன் டேங்க் வெடித்துச் சிதறியதில் இந்த தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மருத்துவமனைக் கட்டடத்திலிருந்து வெளியே எடுத்து வரப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகளும் துரித கதியில் நடக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையில் ஆக்ஸிஜன் டேங்க் வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 82 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு சுகாதாரத் துறை பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT