முகப்பு
உலகம்

இந்திய விமானங்களுக்கான தடையை நீட்டித்தது கனடா

கரோனா பரவல் காரணமாக இந்திய விமானங்களுக்கான தடையை ஜூலை 21 வரை நீட்டித்து கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:38 AM
இந்திய விமானங்களுக்கான தடையை நீட்டித்தது கனடா
பகிர்:

கரோனா பரவல் காரணமாக இந்திய விமானங்களுக்கான தடையை ஜூலை 21 வரை நீட்டித்து கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு தற்காலிக தடையை உலக நாடுகள் பலவும் விதித்து வருகின்றன.

இந்நிலையில் இந்திய விமானங்களுக்கான தடையை நீட்டித்து கனடா அரசு அறிவித்துள்ளது.  அதேசமயம் பிற நாடுகளின் வழியாக கனடா வரும் இந்தியப் பயணிகள் கரோனா சோதனை சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும், ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கும் அத்தியாவசிய பயணம் மேற்கொள்ள வேண்டாம் என கனட மக்களை அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →