பாகிஸ்தான் முன்னாள் அதிபர் உடல்நலக்குறைவால் மறைவு
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் மம்னூன் ஹுசைன் உடல்நலக்குறைவால் தனது 80 ஆவது வயதில் மறைந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் மம்னூன் ஹுசைன் உடல்நலக்குறைவால் தனது 80 ஆவது வயதில் மறைந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் 12ஆவது அதிபராக பொறுப்பு வகித்தவர் மம்னூன் ஹுசைன். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹுசைன் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதனைத் தொடர்ந்து புதன்கிழமை உடல்நலக்குறைவால் அவர் மறைந்தார். அவரது மறைவிற்கு பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1940ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள ஆக்ராவில் பிறந்த ஹுசைன் குடும்பத்தினர் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானில் குடிபெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.