உலகம்

விண்ணுக்கு சென்று பூமி திரும்பினார் அமேசான் நிறுவனர்

DIN

உலக பணக்காரர்களில் ஒருவரான அமேசான் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். 

சுமார் 7 நிமிடங்கள் விண்வெளியில் இருந்து மீண்டும் பூமிக்கு திரும்பினார். 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி இன்று மாலை நியூ ஷெப்பர்ட் ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது.

நிலவில் மனிதன் சென்று வந்ததன் 52-ம் ஆண்டை கொண்டாடும் விதமாக விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல புளு ஆரிஜின் நிறுவனம் திட்டமிட்டது.

அதன்படி, அமேசான் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ், அவரது சகோதரர் மார்க்பெசோஸ், 82 வயதான மூதாட்டி வாலிஃபங்க் உள்பட 4 பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.


சுமார் 11 நிமிடங்கள் விண்ணில் இருந்த பிறகு பாராஷீட் வாயிலாக நான்கு பேரும் பூமிக்குத் திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.: 2 புதிய வேட்பாளர்களை அறிவித்த பகுஜன் கட்சி!

விஜய் தேவரகொண்டா பிறந்தநாளில் 2 புதிய படங்களின் போஸ்டர் வெளியீடு!

‘அடங்காத அசுரன்’: ராயனின் முதல் பாடல் வெளியாகும் நேரம்!

இந்த மாதிரி பேட்டிங்கை தொலைக்காட்சிகளில்தான் பார்த்திருக்கிறேன்: கே.எல்.ராகுல் அதிர்ச்சி!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்

SCROLL FOR NEXT