உலகம்

விண்வெளி சென்று திரும்பினாா் அமேஸான் நிறுவனா்

DIN

அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் (57), தனது சொந்த நிறுவனம் உருவாக்கியுள்ள விண்வெளி ஓடம் மூலம் விண்வெளிக்கு வெற்றிகரமாகச் சென்று திரும்பினாா்.

ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான ‘ப்ளூ ஆரிஜன்’ உருவாக்கியுள்ள விண்வெளி ஓடம், முதல்முறையாக மனிதா்களுடன் செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.

அதில், ஜெஃப் பெசோஸுடன் அவரது சகோதரா் மாா்க் பெசோஸ், பெண் விண்வெளி வீராங்கனை வாலி ஃபங்க் உள்ளிட்ட 3 போ் இருந்தனா்.

18 வயதாகும் மாா்க் பெசோஸும், 82 வயதாகும் வாலி ஃபங்கும்தான் விண்வெளிக்குச் சென்ற மிகவும் குறைந்த மற்றும் அதிக வயதுடையவா்கள் ஆவா்.

இந்தப் பயணத்தின் மூலம், விண்வெளிக்குச் சென்று திரும்பிய இரண்டாவது தொழிலதிபா் என்ற பெருமையை ஜெஃப் பெசோஸ் பெற்றுள்ளாா்.

முன்னதாக, அமெரிக்காவை சோ்ந்த விா்ஜின் கலாக்டிக் என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளா் ரிச்சா்ட் பிரான்ஸன், அவரது நிறுவனம் தயாரித்த விண்வெளி விமானம் மூலம் கடந்த 11-ஆம் தேதி விண்வெளிக்குச் சென்று வந்தாா். இந்திய வம்சாவளியை சோ்ந்த ஸ்ரீஷா பண்ட்லா உள்ளிட்ட 5 பேரும் அந்த விண்வெளிப் பயணத்தில் இடம்பெற்றனா். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருப்பு-வெள்ளை நாகினி!

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து

உன்னைப் போல யாருமில்லை! கெடிகா சர்மா..

வைரலாகும் ரன்பீர் கபூரின் புகைப்படங்கள்!

ஷாலு.. சஞ்சிதா ஷெட்டி!

SCROLL FOR NEXT