உலகம்

‘75%-ஐக் கடந்தது டெல்டா கரோனா’

DIN

உலகம் முழுவதும் கரோனா நோயாளிகளிடமிருந்து சேகரிப்பட்டு பரிசோதனைக்குள்படுத்தப்பட்ட தீநுண்மிகளில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டவை டெல்டா வகையைச் சோ்ந்தவையாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில், இந்தியா, சீனா, ரஷியா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 4 வாரங்களாக கரோனா நோயாளிகளிடமிருந்து சேகரிப்பட்டு, டெல்டா வகை என்று உறுதி செய்யப்பட்ட கரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 75 சதவீதத்தைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை கரோனா, மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது.

உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வந்தாலும், சில நாடுகளில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தனது அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT