உலகம்

தென் ஆப்பிரிக்கா: 70 ஆயிரத்தைக் கடந்த கரோனா பலி

தென் ஆப்பிரிக்காவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்தது.

DIN

தென் ஆப்பிரிக்காவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 243 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 70,018-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 5,667 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இத்துடன், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,83,490-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, தென் ஆப்பிரிக்காவில் 21,69,452 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 1,44,020 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 546 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட தொண்டர்: தாயின் விடியோ குறித்து இளைஞர் விளக்கம்!

எம்.ஜி.ஆர் திரைப்பட வளாகத்தில் ஏசியுடன் கூடிய படப்பிடிப்புத்தளம்: திறந்து வைத்த முதல்வர்!

காஷ்மீர்: எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் - தீவிர தேடுதல் பணி!

ஆற்றைக் கடக்க ஆட்டுத்தோலைப் பயன்படுத்திய அசிரியன் போர் வீரர்கள்!

நல்லகண்ணு உடல்நிலை: நலம் விசாரித்த விஜய்!

SCROLL FOR NEXT