இஸ்ரேல் : கரோனா பரவலால் மேலும் 4 நாடுகளுக்குச் செல்ல பயணிகளுக்குத் தடை  
உலகம்

இஸ்ரேல் : கரோனா பரவலால் மேலும் 4 நாடுகளுக்குச் செல்ல பயணிகளுக்குத் தடை 

கரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கி பின் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் பல நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறார்கள்.

DIN

கரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கி பின் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் பல நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறார்கள்.

இந்நிலையில் இஸ்ரேலில் புதிதாக நோய்த் தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முன்னதாக அர்ஜென்டினா, பிரேசில் , தென் ஆப்ரிக்கா , இந்தியா , மெக்ஸிகோ , ரஷ்யா , ஸ்பெயின்  மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு பயணிக்க அரசு  தடைவிதித்திருந்தது. 

தற்போது இங்கிலாந்து , ஜார்ஜியா , சைப்ரஸ் மற்றும் துருக்கி ஆகிய நான்கு நாடுகளுக்குச் செல்லத்  தடை விதிக்கப்பட்டிருக்கிறது .

மேலும் தடை விதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இஸ்ரேல் வருபவர்கள் கண்டிப்பாக தொற்று பாதிக்கப்படாதவராகவும் , ஒருமுறையாவது தடுப்பூசி எடுத்துக்கொண்டாராராகவும் இருக்க வேண்டும் என்றும் ஒருவாரம் வரை அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT