உலகம்

இந்திய விமானங்களுக்கான தடையை நீக்கியது நெதர்லாந்து

DIN

கரோனா பரவல் காரணமாக இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நெதர்லாந்து அரசு செவ்வாய்க்கிழமை நீக்கியது.

இந்தியாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக பல்வேறு நாடுகளும் இந்திய விமானங்களுக்கு தற்காலிகத் தடை விதித்தன.

இந்நிலையில் தொற்று பரவல் குறையத் தொடங்கிய நிலையில் இந்திய விமானங்களுக்கான தடையை நெதர்லாந்து அரசு நீக்கியுள்ளது. 

இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் அர்ஜென்டினா, பஹ்ரைன், பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

16-ம் நூற்றாண்டு பெண்ணா? ஹரிஜா!

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

காஞ்சிப் பட்டு, கல் ஜிமிக்கி.. அபர்ணா பாலமுரளி!

மோடி 3.O: 4 பெரிய மாற்றங்கள் ஏற்படும் - பிரஷாந்த் கிஷோர் கணிப்பு!

தாய்லாந்தில் மடோனா!

SCROLL FOR NEXT