உலகம்

வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய 2 முக்‍கிய திட்டங்களை மேற்கொள்கிறது நாசா

வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய 2 முக்‍கிய திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக புதன்கிழமை அமெரிக்‍க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

DIN


வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய 2 முக்‍கிய திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக புதன்கிழமை அமெரிக்‍க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

பூமிக்‍கு மிக அருகில் இருக்‍கும் கோள்களில் ஒன்றான வெள்ளி கிரகத்தின் தட்ப வெப்பம் மற்றும் புவியியல் தன்மையை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக 500 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்‍குவதாக நாசா அறிவித்துள்ளது. 

நாசாவின் கண்டுபிடிப்பு திட்டத்தின் கீழ் வரும் 2028 முதல் 2030-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சுமார் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,650 கோடி) செலவில் இந்த இரு திட்டங்களையும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த திட்டங்களுக்கு டாவின்சி, வெரிட்டாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வெள்ளி கிரகம் எப்படி தோன்றியது? அங்கு கடல் இருந்ததா?, கிரகத்தின் புவியியல் வரலாறு குறித்தெல்லாம் டாவின்சி திட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 

வெள்ளி கிரகத்தின் புவியியல் வளர்ச்சியையும், பூமிக்‍கும் அதற்குமான வேறுபாடுகளையும் வெரிட்டாஸ் திட்டம் ஆராய உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT