உலகம்

ரஷியாவில் 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அதிகபட்ச பாதிப்பு

DIN


ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,407 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 7-ம் தேதிக்குப் பிறகு பதிவாகும் அதிகபட்ச தினசரி பாதிப்பு இது என புதன்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ரஷியாவில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 51,56,250 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 399 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,24,895 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 9,814 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 47,61,899 பேர் குணமடைந்துள்ளனர்.

ரஷியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாஸ்கோவில் புதிதாக 4,124 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 12,09,214 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT