முகப்பு
உலகம்

ரஷிய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் பைடன் வழங்கிய சிறப்பு பரிசு

ஜெனீவாவில் நடைபெற்ற சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு வழங்கிய சிறப்பு பரிசு கவனம் பெற்றுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
பகிர்:

ஜெனீவாவில் நடைபெற்ற சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு வழங்கிய சிறப்பு பரிசு கவனம் பெற்றுள்ளது.

உலகின் முன்னணி வல்லரசு நாடுகளாக அறியப்படுபவை அமெரிக்காவும், ரஷியாவும் பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளில் எதிரெதிர் பார்வை கொண்டவை. ஒன்றுக்கொன்று போட்டியாக உள்ள இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேசிக் கொள்வது உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஸ்சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் புதன்கிழமை சந்தித்துக் கொண்டனர். 

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு ரஷிய அதிபருடன் நடைபெறும் முதல் நேரடி சந்திப்பு  என்பதால் உலகின் கவனம் இந்த சந்திப்பின் பக்கம் திரும்பியது. 

இந்நிலையில் இந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு 23 காரட் தங்கக் காப்பால் செய்யப்பட்ட கண்கண்ணாடியை பரிசளித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் பைடன் விரும்பி அணியும் இந்த கண் கண்ணாடி போர் விமானிகளுக்காக மாசூசெட்ஸில் தயாரிக்கப்படும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். பல்வேறு முக்கியத் தலைவர்களுடனான சந்திப்பில் அமெரிக்க அதிபர் பைடன் இத்தகைய கண்ணாடியை அணிவது வழக்கம்.

மேலும் புதினுக்கு நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட கண்ணாடி சிற்ப தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட காட்டெருமை வடிவிலான படிக சிற்பமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →