முகப்பு
உலகம்

ரஷியாவில் புதிதாக 17,906 பேருக்கு கரோனா

​ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,906 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
கோப்புப்படம்
பகிர்:


ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,906 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷியா கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. நேற்று (வெள்ளிக்கிழமை) 17,262 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 17,906 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 3,205 பேருக்கு (17.9 சதவிகிதம்) எவ்வித அறிகுறியும் இல்லாமல் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 52,99,215 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 466 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,28,911 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 10,684 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 48,61,343 பேர் குணமடைந்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.