திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?
திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்திருப்பது பற்றி..
தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் கட்சிகளான திமுக - அதிமுக இரண்டுமே இந்த முறை அதிக தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்குப் பகிர்ந்து கொடுத்திருப்பதால் 2026 தேர்தலில் நேரடியாக மோதும் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்திருக்கின்றன.
கடந்த 2021ஆம் ஆண்டு திமுக நேரடியாக களம்கண்ட தொகுதிகள் 173 ஆக இருந்த நிலையில், இம்முறை இது 9 தொகுதிகள் குறைந்து 164 ஆக உள்ளது. அதுபோலவே, அதிமுக கடந்த முறை 179 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 12 தொகுதிகள் குறைந்து இம்முறை 167 தொகுதிகளில்தான் நேரடியாகக் களம்காண்கிறது.